IMMEDIATE PRESS RELEASE 17 7 2012
போலந்து சுயேட்சை நீர் நிறுவனம் தேவை - சார்ல்ஸ்
அண்மையில் சிலாங்கூர் உட்பட சில இடங்களில் தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டிருப்பதை ஆராய தடயவியல் தணிக்கை அறிக்கை தயாரிக்க போலந்து சுயேட்சை நீர் நிறுவனம் தேவை என கூறினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
இந்த போலந்து சுயேட்சை நீர் நிறுவனம் நீரை விநியோகிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் உலக அளவில் அங்கீகரிக்கப் பட்ட நிறுவனம். ஆதலால், நீரில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என கூறும் சபாஷின் கூற்றில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதனை ஆராய இது மிக முக்கியம் என அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், சபாஷ் நடவடிக்கைகளை சிலாங்கூர் அரசாங்கம் எடுத்துக் கொள்ள விரும்புகிறது என சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும், இது நீர் விரயங்களையும் குறைப்பது மட்டுமில்லாமல், மக்களுக்கு நீர் சேவையாற்ற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் மக்கள் நலனில் ஆர்வம் உள்ள சிலாங்கூர் அரசாங்கம், சபாஷ் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதின் வாயிலாக இலவச நீர், குறைந்த கட்டண நீர் சேவை, தரமான தண்ணீர் மற்றும் சிறப்பான சேவைகளையும் வழங்க முடியும் என்பதால் இந்த மாற்றம் மிக முக்கியம் எனவும் இதற்கு மத்திய அராசங்கம் இணக்கம் காட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் சார்ல்ஸ்.
